பிரேசில் மருத்துவமனைகளில் பிராணவாயுவுக்கு தட்டுப்பாடு

பிரேசிலின் மனவுஸ் நகரில் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான பிராணவாயுவுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதோடு மருத்துவ ஊழியர்களிடமும் அவநம்பிக்கையின்மை உருவாகியுள்ளது.

அமேசனஸ் மாநிலத்தில் இருக்கும் இந்த நகரில் உயிரிழப்பு மற்றும் நோய்த் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தேவையான விநியோகங்கள் மற்றும் உதவிகள் போதிய அளவில் இல்லாத சூழலில் பலரும் உயிரிழக்கக் கூடும் என்று மருத்துவ ஊழியர்கள் உள்ளூர் ஊடகத்திற்கு தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவுக்கு அடுத்து கொரோனா வைரஸ் தொற்றினால் பிரேசிலில் அதிகபட்சமாக 205,000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்தப் பெருந்தொற்றின் முதல் அலைத்தாக்கத்தில் அமேசனஸ் பெரும் பாதிப்பை சந்தித்த நிலையில் புதிய அலைத் தாக்கத்திலும் அந்தப் பிராந்தியம் பெரிதாக பாதிப்பை எதிர்கொண்டுள்ளது.

உடல்களை வைப்பதற்காக கடந்த வாரம் குளிரூட்டப்பட்ட கொள்கலன்கள் கடந்த வாரம் கொண்டுவரப்பட்டபோது, மாநில அளவில் அவசர நிலையும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

Sat, 01/16/2021 - 14:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை