துனீசியாவில் ஆர்ப்பாட்டம்: 600க்கு மேற்பட்டோர் கைது

துனீசியாவில் நான்காவது நாளாக நீடிக்கும் ஆர்ப்பாட்டங்களில் 600க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இளைஞர்களை பிரதானமாகக் கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் தலைநகர் துனீஷ் வீதிகளில் ஒன்றுதிரண்டதோடு பொலிஸார் மீது கற்களையும் பெற்றோல் குண்டுகளையும் வீசி எறிந்தனர்.

இவர்கள் மீது பாதுகாப்பு படையினர் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டதோடு தண்ணீரைப் பீச்சடித்தனர்.

துனீசியா பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்திருப்பதோடு மூன்றில் ஒரு இளைஞர்கள் வேலையின்றி காணப்படுகின்றனர். கொரோனா பெருந்தொற்றினால் பொருளாதார நிலை அங்கு மேலும் மோசமடைந்துள்ளது.

துனீசியாவில் மக்கள் எழுச்சிப் போராட்டம் வெடித்து அரபு உலகெங்கும் அது பரவி பத்து ஆண்டுகளை எட்டிய நிலையிலேயே அங்கு புதிய போராட்டம் வெடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

துனீஷ் நகருக்கு வெளியில் கசரின், கப்சா மற்றும் மொனஸ்டிர் நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

Wed, 01/20/2021 - 07:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை