Header Ads

தென்னாபிரிக்க வைரஸ் திரிபு வேகமாகத் தொற்றும் தன்மை மருத்துவ நிபுணர் குழு உறுதி

தென்னாபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் திரிபு ஒன்று முந்தையதை விடவும் அதிக தொற்றுத் தன்மை கொண்டது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் அந்தத் திரிபு அதிக உயிராபத்துக் கொண்டது என்பதற்கான ஆதாரம் இல்லை என்று கூறியுள்ளனர்.

இந்த புதிய திரிபு 50 வீதம் அதிக நோய்ப் பரவல் தன்மை கொண்டது என்று தென்னாபிரிக்க சுகாதார அமைச்சின் விஞ்ஞானக் குழு இணைத் தலைவரான தொற்றுநோயியல் நிபுணர் சலிம் அப்துல் கரீம் தெரிவித்துள்ளார்.

“ஆரம்ப திரிபை விடவும் இந்த புதிய கொவிட் வைரஸ் திரிபு அதிக உயிராபத்துக் கொண்டது என்பதற்கான ஆதாரம் இல்லை” என்று அவர் தெரிவித்தார். தென்னாபிரிக்காவின் பிரதான வைரஸ் தொற்று கொத்தணிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மூலமே நிபுணர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.

ஆபிரிக்கக் கண்டத்தில் வேறு எந்த நாட்டை விடவும் தென்னாபிரிக்காவில் அதிகபட்சமாக 1.3 மில்லியன் நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு 37,105 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன் இரண்டாவது அலைத் தாக்கம் தென்னாபிரிக்க சுகாதார கட்டமைப்பை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது.

Wed, 01/20/2021 - 08:02


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.