கண்டி பூஜாபிட்டிய பகுதியில் நேற்று 30 தொற்றாளர்கள்; பயணத்தடையும் விதிப்பு

கண்டியின் பூஜாபிட்டியிலுள்ள கொஸ்கொடை கிராமத்தில் கொரோனா தொற்றாளர்கள் 30 பேர் அடையாளம் காணப்பட்டதால் குறித்த பிரதேசத்திற்கு பயணத் தடைகளை விதிக்க பொலிஸ், சுகாதாரத் துறை நேற்று (03) நடவடிக்கை எடுத்துள்ளது.

பூஜாபிட்டிய பொது சுகாதார பரிசோதகர் லலித் தயவன்ச இதுப ற்றி கூறுகையில்,

குறித்த கிராமத்தில் குறுகிய காலத்தினுள் 30 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அப்பகுதியிலுள்ள அதிகமானோர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

பயண தடை விதிக்கப்பட்டுள்ள கொஸ்கோடை கிராம மக்களுக்கு உலர் பொதிகளை வழங்க கண்டி மாவட்ட செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷ தெரிவித்தார்.

பூஜாபிட்டிய பிரதேச செயலாளர் திருமதி எம்.எம். மடஹபொல கூறுகையில்,

கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மடஹபொல, திவனவத்தை மற்றும் கல்ஹின்ன ஆகிய பகுதிகளிலும் தொற்றாளர்கள் காணப்படுவதால் பயணத்தை முடிந்தவரை கட்டுப்படுத்துமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மத்திய மாகாணத்தில் கொவிட் -19 புதிய தொற்றாளர்கள் எண்ணிக்கை நேற்று (03) 2026 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய மாகாண சுகாதார சேவைகள் தெரிவித்துள்ளது.

மத்திய மாகாணத்தில் அதிக எண்ணிக்கையிலான கோவிட் நோய்த்தொற்றுகள் கண்டி மாவட்டத்திலே பதிவாகியுள்ளன, இதன்படி, கண்டி மாவடடத்தில் 1273 தொற்றாளர்களும் நுவரெலியா மாவட்டத்தில் 601 தோற்றாளர்களும் , மாத்தளை மாவட்டத்தில் 152 தோற்றாளர்களும் பதிவாகியுள்ளன. மத்திய மாகாணத்தில் நேற்று (03) காலை 6.00 மணிக்கு முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் 59 புதிய தொற்றாளர்கள் இனம்காணப்பட்டுள்ளனர்.

எம்.ஏ.அமீனுல்லா

Mon, 01/04/2021 - 14:21


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை