நைகர் கிராமங்களில் தாக்குதல்: பலி எண்ணிக்கை 100ஆக உயர்வு

ஜிஹாதிக்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்களால் கடந்த சனிக்கிழமை இரு கிராமங்களில் நடத்திய தாக்குதல்களில் 100 பேர் வரை உயிரிழந்திருப்பதாக நைகர் பிரதமர் பிரிகி ரபினி தெரிவித்துள்ளார்.

இதன்படி சொம்பங்கு கிராமத்தில் 70 பேரும் மற்ற கிராமமான சரும்டாரியியில் 30 பேரும் கொல்லப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த இரண்டு கிராமங்களுகம் மாலி நாட்டுடனான நைகர் எல்லையில் அமைந்துள்ளன.

நைகரில் இன வன்முறைகள் மற்றும் இஸ்லாமியவாத குழுக்களின் மிகப்பெரிய தாக்குதல்களில் ஒன்றாக இது உள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு எந்தத் தரப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. இதற்கு பொறுப்பானவர்கள் சுமார் 100 மோட்டார் சைக்கிள்களில் வந்துள்ளனர் என்று உள்ளூர் மேயரான அல்மு ஹசன் தெரிவித்துள்ளார்.

இவர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து சம காலத்தி இரு தாக்குதல்களையும் நடத்தியுள்ளனர். இதில் மேலும் 75 கிராம மக்கள் காயமடைந்திருப்பதாக அந்த நகர மேயர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரபினி அந்த இரண்டு கிராமங்களுக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை விஜயம் மேற்கொண்டார். “இந்த நிலை மிகக் கொடூரமானது. ஆனால் விசாரணைகள் நடத்தப்படும். எனவே இந்த குற்றத்திற்கு தண்டனை இன்றி தப்ப முடியாது” என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Tue, 01/05/2021 - 08:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை