வாகன இலக்கத் தகடு, சாரதி அனுமதிப்பத்திரம் Speed Post இல்

வாகன இலக்கத்தகடு மற்றும் சாரதி அனுமதிப்பத்திரங்களை விரைவுத் தபால் (Speed Post) மூலம்சேவை பெறுநர்களுக்கு அனுப்புவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தபால் திணைக்களத்துடன் இணைந்து இதனை செயற்படுத்துவதற்கு போக்குவரத்து அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வாகனமொன்றைப் பதிவு செய்யும் போது வாகனப் பதிவுச் சான்றிதழ், வாகன இலக்கத் தகடு மற்றும் ஸ்ரிக்கர் ஒன்றும் வழங்கப்படும். தற்போதுள்ள பொறிமுறைக்கமைய அவற்றைப் பெறுவதற்காக குறிப்பிட்ட காலமும் செலவும் அதேபோல் மோட்டார் வாகனத் திணைக்களத்திற்கு செல்ல வேண்டியுள்ளது.

அவ்வாறே, புதிய சாரதி அனுமதிப்பத்திரம் பதிவுத் தபாலில் சேவை பெறுநருக்கு அனுப்பப்படும் போது காலதாமதம் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது. அதற்குத் தீர்வாக தபால் திணைக்களத்தின் நடைமுறையிலுள்ள விரைவுத் தபால் சேவையின் மூலம் சேவை பெறுநர்களின் வீடுகளுக்கே வழங்குவதற்காக பொருத்தமான நிகழ்ச்சித்திட்டத்தை தபால் திணைக்களத்துடன் இணைந்து செயற்படுத்துவதற்கு போக்குவரத்து அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Wed, 12/02/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை