சிறைகளில் நெருக்கடி நிலைக்கு சட்டத்திலுள்ள பலவீனமே காரணம்

சிறைச்சாலைகளில் காணப்படும் கடுமையான நெருக்கடிகளுக்கு பிரதான காரணம் நீதிமன்றங்களினால் பிணை வழங்கப்படக் கூடியவர்களுக்கு பிணை வழங்காது சிறைச்சாலைகளில் அடைக்கப்படுவதே காரணமென கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற 2021 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் நீதி அமைச்சு மற்றும் தொழில் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிறைச்சாலைகளில் நெருக்கடி நிலைமைகள் ஏற்பட்டுள்ளன. பிணை வழங்கக் கூடியவர்களுக்கு பிணை வழங்காது இருப்பதே இதற்கு காரணமாகும். இது பிழையான கொள்கையாகும். இதனை திருத்த வேண்டும்.

இந் நபர் நீதிமன்றத்தினால் குற்றவாளியாக அறிவிக்கப்படாத காரணத்தினால் அவரை நிரபராதியாகவே பார்க்க வேண்டும். இதனால் அவர் வழக்கு விசாரணைகளுக்கு நீதிமன்றத்திற்கு வரமாட்டார், சாட்சியாளரை அச்சுறுத்தலாம்.

சாட்சியத்தை மாற்றலாம், சமூகத்திற்குள் அவரை அனுப்பினால் சமூகத்திற்குள் குழப்பம் ஏற்படும் என்று கருதினால் மட்டுமே சிறைக்கு அனுப்பலாம். இதனை தவிர வேறு காரணங்களுக்காக சிறைக்கு அனுப்ப முடியாது. ஆனால் இந்த முறைமையை பெரும்பாலான நீதிபதிகள் பின்பற்றுவதில்லை.

நீதிமன்றத்தில் மனித உரிமை மீறப்படுவதாக கருதினால் அவருக்கு நேரடியாக உயர் நீதிமன்றத்திற்கு செல்லலாம்.

கிராமத்தவர்களுக்கு பணப் பிரச்சினை காரணமாக அவ்வாறு செல்ல முடியாத நிலைமையே காணப்படுகின்றது. இவை எமது சட்டத்துறையில் காணப்படும் மிகவும் பலவீனமான விடயமே ஆகும்.

அரசியலமைப்பை திருத்தும் போது தேர்தல் முறையில் மாற்றம் செய்ய வேண்டும். அடுத்த வருடத்தில் புதிய அரசியலமைப்பை செய்யும் போது தேர்தல் முறையில் மாற்றம் செய்ய நடவடிக்கையெடுக்க வேண்டும் என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

 

Thu, 12/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை