புதிய ரக கொரோனா தொற்று: பிரிட்டனில் அதிக கட்டுப்பாடு

பிரிட்டனில் தொற்றக்கூடிய அபாயம் மேலும் அதிகமுள்ள புதிய ரக கொரோனா வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்க அந்நாட்டுப் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் உத்தரவிட்டுள்ளார்.

லண்டன், இங்கிலாந்தின் தென் கிழக்கு பகுதி ஆகியவற்றைச் சேர்ந்தவர்களுக்குக் குறைந்தது இம்மாதம் 30ஆம் திகதிவரை வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை அவர் பிறப்பித்தார்.

அந்தப் புதிய ரக கொரோனா வைரஸ், மேலும் 70 வீதம் வரை தொற்றக்கூடிய அபாயம் கொண்டது என்றார் அவர். அது இதுவரை அடையாளம் காணப்படாத இடங்களில் அதன் பரவலைக் குறைப்பதே நோக்கம்.

புதிய கட்டுப்பாடுகளால், இங்கிலாந்தில் சுமார் 35 வீதத்தினர் கிறிஸ்மஸ் விழாக்காலத்தில் பயணங்களை மேற்கொள்ள முடியாது. மற்றவர்களைச் சந்திக்க இயலாது. இந்த புதிய ரக வைரஸ் தொடர்பில் பிரிட்டனுடன் நெருக்கமான தொடர்பில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இந்த புதிய ரக கொரோனா தொற்று முந்தியதை விட உயிராபத்து அதிகம் உள்ளது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Mon, 12/21/2020 - 14:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை