அனைத்து ஆரம்பப் பிரிவு பாடசாலைகளும் ஜனவரியில் ஆரம்பம்

- மேல் மாகாணம் பின்னர் அறிவிப்பு

மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் எதிர்வரும் ஜனவரியில் ஆரம்பப் பிரிவு பாடசாலைகளை திறந்து கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நேற்றைய தினம் கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கும் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்குமிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையையடுத்து மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்தார்.

ஜனவரி மாதம் பாடசாலைகளுக்கான விடுமுறை நிறைவடைந்த பின்னர் ஆரம்ப்ப பிரிவு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

அதற்கு இணங்க பாடசாலைகளை ஆரம்பிக்கும் திகதிகளை கல்வியமைச்சு பாடசாலைகளுக்கும் பெற்றோர்களுக்கும் அறிவிக்குமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் பிரதேசங்களில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்படும் பட்சத்தில் அந்த பிரதேசத்துக்கு பொறுப்பான வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் பாடசாலை அதிபர்கள் அப்பகுதி பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து பாடசாலையில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் உரிய தீர்மானங்களை எடுப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Mon, 12/21/2020 - 13:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை