எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் அதிகரிப்பு

எவரெஸ்ட் சிகரத்தின் மறுமதிப்பீடு செய்துள்ள 8848.86 மீற்றர் உயரத்தை சீனாவுடன் இணைந்து நேற்று செவ்வாய்க்கிழமை நேபாளம் அறிவித்தது.

இதனை நேபாள நில முகாமைத்துவத் துறை அமைச்சு வெளியிட்டது. கடந்த 1954 ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை இந்திய நில அளவைத் துறை அளவிட்டது. அப்போது அந்த சிகரத்தின் உயரம் 8,848 மீற்றர் என அறிவிக்கப்பட்டது.

உலகின் மிக உயா்ந்த மலையான எவரெஸ்ட் அமைந்துள்ள நேபாளத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் உட்பட பல்வேறு காரணங்களால் எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்று விவாதம் எழுந்தது.

இதனைத்தொடா்ந்து அந்தச் சிகரத்தின் உயரத்தை அளவிட்டு மறுமதிப்பீடு செய்யும் பணியை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னா் நேபாளம் ஆரம்பித்தது. இந்த பணி தற்போது நிறைவு பெற்று மறுமதிப்பீடு செய்யப்பட்ட எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி மறுமதிப்பீட்டு உயரம் 8848.86 மீற்றர் என நேபாளம் அறிவித்துள்ளது. இதன்படி எவரெஸ்ட் சிகரித்தின் உயரம் 0.86 மீற்றர் அதிகரித்துள்ளது. நிலநடுக்கத்தால் இந்த சிகரத்தின் உயரம் குறைந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை தீர்ப்பதாக இந்த முடிவு வெளியாகியுள்ளது.

 

Wed, 12/09/2020 - 07:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை