முதல்முறை ஒலியை விடவும் வேகமாக பறந்தவர் மரணம்

ஒலி வேகத்தை முறியடித்து முதல்முறை பறந்த அமெரிக்க விமானி சக் யீகர் தனது 97 ஆவது வயதில் காலமானார்.

1947 இல் சோதனை ரொக்கெட் விமானமான தனது ‘பெல் எக்ஸ்–1’ விமானத்தைக் கொண்டு அவர் இந்த சாதனையை படைத்திருந்தார். அமெரிக்க விண்வெளித் திட்டங்களுக்கு வழிவகுக்கும் வகையில் தொடர்ந்து அவர் பல வேகம் மற்றும் உயரப் பறக்கும் சாதனைகளை முறியடித்தார்.

‘ஒரு சிறந்த வாழ்வை வாழ்ந்த, வலிமை, சாகசம் மற்றும் தேசப்பற்றுக் கொண்ட அமெரிக்காவின் சிறந்த விமானி எப்போதும் நினைவில் இருப்பார்’ என்று அவரது மனைவி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

1947 ஒக்டோபர் 14 ஆம் திகதி யீகரின் விமானம் தென்மேற்கு அமெரிக்காவின் மொஜாவே பாலைவனத்திற்கு மேலால் பறந்து குண்டு வீசி சோதனை செய்தது. அப்போது அந்த விமானம் 45,000 அடி உயரத்தில் ஒலியை விட வேகமாக (மணிக்கு 1,225 கி.மீ.) பறந்தது.

Wed, 12/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை