பிரிட்டனில் தடுப்பூசி விநியோகம் ஆரம்பம்

பிரிட்டனில் பைசர் - பயோ என்டெக் நிறுவனங்கள் தயாரித்துள்ள கொவிட்–19 நோய்த்தொற்றுத் தடுப்பு மருந்து விநியோகம் இந்த வாரம் ஆரம்பமாகிறது. அந்தத் தடுப்பு மருந்தைப் பெரிய அளவில் பயன்படுத்தவிருக்கும் முதல் நாடாக பிரிட்டன் மாறவுள்ளது.

அவை முதலில், மருத்துவமனைகளுக்கும் பின்னர் தனியார் மருந்தகங்களுக்கும் வழங்கப்படும். 80 வயதுக்கும் மேலானவர்கள், முன்னிலை சுகாதார ஊழியர்கள், பராமரிப்பு ஊழியர்கள் ஆகியோருக்குத் தடுப்பு மருந்து வழங்குவதில் முன்னுரிமை கொடுக்கப்படும்.

இதில் 94 வயதான பிரிட்டன் மகாராணி இரண்டாவது எலிசபத் மற்றும் 99 வயதான அவரது கணவர் இளவரசர் பிலிப் ஆகியோர் இந்த வாரத்தில் தடுப்பு மருந்து போட்டிடுக்கொள்ளவிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

பிரிட்டன் மொத்தம் 40 மில்லியன் முறை பயன்படுத்தும் தடுப்பு மருந்தை வாங்கியுள்ளது. 67 மில்லியன் மக்கள் தொகையுள்ள பிரிட்டனில் 20 மில்லியன் பேருக்கு இரண்டு முறை வழங்க அது போதுமானதாக இருக்கும் என நம்பப்படுகிறது. பைசர் - பயோஎன்டெக் தடுப்பு மருந்தின் அவசரப் பயன்பாட்டுக்குப் பிரிட்டன் கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது.

 

Mon, 12/07/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை