கைத்தறி, புடவைக் கைத்தொழில் குறித்து அதிகாரிகளுடன் ஆராய்வு

கைத்தறி, புடவைக் கைத்தொழில் மற்றும் கைவினைப் பொருட்கள் உற்பத்தி அவற்றுக்கான சந்தை வாய்ப்பு தொடர்பாக பற்றிக், கைத்தறி மற்றும் உள்ளூர் ஆடை வடிவமைப்பு இராஜாங்க அமைச்சர் தயாஸ்ரீ ஜயசேகர மட்டக்களப்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

மாவட்டத்திலுள்ள கைத்தறி மற்றும் உள்ளூர் ஆடை வடிவமைப்பு உற்பத்தி தொடர்பான விடயங்களை கண்காணிக்க மட்டக்களப்புக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

இந்த விஜயத்தின் ஓர் அங்கமாக மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான கே. கருணாகரனை சந்திக்கும் நிகழ்வொன்று நேற்று (11) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இது தவிர இம்மாவட்டத்தில் கடந்த காலங்களில் இயங்கி வந்த கைத்தறி நெசவு நிலையம் மூடப்பட்டு அம்பாரை மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளமை பற்றும் அதனை மீள புனரமைத்து புதிய வடிவமைப்புடன் ஆரம்பிப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. மேலும் இத்தொழில் தொடர்பான பயிற்சிகளை பெண்களுக்கும் குறிப்பாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்குமாக வழங்கி சுயதொழி வாய்ப்பினை அதிகரிக்கச் செய்து அவர்களின் உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டமை குறிப்படத்தக்கது.

  

மட்டக்களப்பு சுழற்சி நிருபர்

Sat, 12/12/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை