மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மூன்றாம் கட்டப் பணிகள் ஆரம்பம்

- மதிப்பிடப்பட்ட செலவு ரூ.142.5 மில்லியன்

மத்திய அதிவேக நெடுஞ்சாலை பணிகளை துரிதப்படுத்தும் வேலைத்திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் கீழ் பொத்துஹெர முதல் கலகெதர வரையிலான அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமான பணிகள் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் (19) ஆரம்பிக்கப்பட்டது.

குருணாகல் - வதாகொட – பொத்துஹெர வீதியின் லிஹினிகிரிய பகுதியை அண்மித்த மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மூன்றாவது கட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர்,

வெளிநாட்டிற்கு ஒப்பந்தம் வழங்கி இந்த வேலையை செய்வதையே நாம் சாதாரணமாக செய்து வந்தோம். வெளிநாட்டு ஒப்பந்தக்காரர்கள், இன்றேல் இலங்கை ஒப்பந்தக்காரர்கள்.

தற்போது அரசாங்கத்தினால் அதிவேக நெடுஞ்சாலையை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்க தயாராகியுள்ளோம்.

நெடுஞ்சாலை, வீடமைப்பு திட்டங்கள், கல்வியென பின்னோக்கி சென்ற அனைத்து துறைகளையும் முன்னோக்கி நகர்த்த வேண்டும். இந்த நிலையில் எமக்கு உங்கள் அனைவரதும் ஒத்துழைப்பு அவசியமாகும். நாட்டு மக்களின் ஆதரவு அவசியமாகும்.

நாம் நியமிக்கப்பட்டு மூன்று மாத காலமேயாகின்றது. ஜனாதிபதிக்கு மாத்திரமே ஒரு வருடமாகிறது. இந்த மூன்று மாதங்களுக்குள் நாம் செய்த பணிகள் மிகப்பெரியது. மக்கள் எம் மீது கொண்ட நம்பிக்கையை நாமும் கொண்டுள்ளோம். எதிர்காலத்திலும் அந்த நம்பிக்கையை பாதுகாத்து செயற்படுவோமென பிரதமர் தெரிவித்தார்.

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மூன்றாவது கட்டம் பொத்ஹெர முதல் ஆரம்பிக்கப்பட்டு றம்புக்கனை ஊடாக கலகெதர வரையான 31.7 கிலோமீற்றர் நெடுஞ்சாலையின் கட்டுமான பணிகளின் ஆரம்ப நிகழ்வு நடைபெற்றது.

42 மாதங்களுக்குள் நிர்மாணப் பணிகளை நிறைவுசெய்ய எதிர்பார்க்கும் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மூன்றாம் கட்ட கட்டுமான பணிகளுக்கான மதிப்பிடப்பட்ட செலவு 142.5 மில்லியன் ரூபாயாகும்.

Mon, 12/21/2020 - 18:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை