ஈராக்கின் அமெரிக்க தூதரகம் அருகே ரொக்கெட் குண்டு வீச்சு

ஈராக் தலைநகர் பாக்தாத்திலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு அருகே ரொக்கெட் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சுமார் ஓர் ஆண்டுக்கு முன்னர் அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் ஈரானிய இராணுவத் தளபதி காசிம் சுலைமானி ஈராக்கில் கொல்லப்பட்டார். அந்தச் சம்பவத்திற்கு பழிதீர்க்கும் விதத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாமெனச் சந்தேகிக்கப்படுகிறது.

அண்மையத் தாக்குதலால் ஈராக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, நகரின் கிழக்கே 5 முறை வெடிப்புச் சத்தம் கேட்டதாக ஏ.எப்.பீ செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

அதனைத் தொடர்ந்து அமெரிக்கத் தூதரகத்துக்கு அருகே மூன்று ரொக்கெட் குண்டுகள் விழுந்தன. தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்காவும் அதன் தற்காப்பு ஏவுகணைகளை முடுக்கிவிட்டது. ஏவுகணைத் தாக்குதலில் உயிர்ச் சேதம் ஏதும் இல்லை.

இராணுவத் தளபதி காசிம் சுலைமானி மரணத்துக்குப் பின்னர் அமெரிக்கத் தூதரகம் மட்டுமின்றி, அமெரிக்க அதிகாரிகளும் இராணுவ வீரர்களும் அடிக்கடி தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர்.  

 

Tue, 12/22/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை