மூடப்பட்ட நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயம் மீண்டும் திறப்பு

நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் கொவிட் தொற்றுக்குள்ளான ஆசிரியை ஒருவர் கடந்த 06.12.2020 அன்று கண்டுப்பிடிக்கப்பட்டதை அடுத்து பாடசாலை தொற்று நீக்கம் செய்யப்பட்டு மூடப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டது.

தொற்றுக்குள்ளான ஆசிரியையுடன் நேரடியாக தொடர்புபட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் என சுமார் 200 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டது.

அதில் இரண்டு மாணவர்களுக்கு மாத்திரம் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் ஏனையவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் இன்று பாடசாலையை திறக்க முடியும் என மஸ்கெலியா பொது சுகாதார வைத்திய அதிகாரி டி. சுந்தர்ராஜன் தெரிவித்தார்.

இதனை அடுத்து நேற்று பாடசாலையின் அதிபர் எஸ்.ராஜன் பாடசாலைக்கு விஜயம் செய்து மீண்டும் தொற்று நீக்கி தெளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன் ஹற்றன் வலயக் கல்விப் பணிப்பாளர் பழனிமுத்து ஸ்ரீதரன் ஆகியோர் பாடசாலைக்கு வருகை தந்து பாடசாலை திறக்கும் நடவடிக்கைகளை பார்வையிட்டதுடன் தேவையான ஆலோசனைகளையும் வழங்கினார். அதன் அடிப்படையில் இன்று பாடசாலையை திறப்பதற்கு பாடசாலை முழுமையான சுகாதார வழிமுறைகளை பின்பற்றி ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாகவும் மாணவர்களும் ஆசிரியர்களும் பாடசாலைக்கு சமூகமளிக்க முடியும் என்றும் பாடசாலையின் அதிபர் எஸ்.ராஜன் தெரிவித்தார்.

ஹற்றன் விசேட, கொட்டகலை தினகரன் நிருபர்கள்

Mon, 12/21/2020 - 11:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை