ஆர்ஜன்டீனா பாராளுமன்றில் கருக்கலைப்புக்கு ஆதரவு

பதினான்கு வாரங்கள் வரையான கருக்களை, கருக்கலைப்புச் செய்வதை சட்டபூர்வமாக்குவதற்கு ஆர்ஜன்டீன பாராளுமன்றத்தில் ஒப்புதல் கிடைத்துள்ளது.

செனட் சபையில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நீண்ட விவாதத்திற்குப் பின்னர் இந்த சட்டத்திற்கு ஆதரவாக 38 வாக்குகளும் எதிராக 29 வாக்குகளும் கிடைத்தன.

ஆர்ஜன்டீனாவில் இதுவரை கற்பழிப்பு சம்பவங்கள் அல்லது தாயின் உடல் நிலைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் சந்தர்ப்பங்களில் மாத்திரமே கருக்கலைப்புக்கு அனுமதி இருந்தது.

இந்த சட்டத்தை மாற்றுவதற்கு செயற்பாட்டாளர்கள் கடந்த பல ஆண்டுகளாக போராடி வந்தனர்.

ஜனாதிபதி அல்பேர்டோ பெர்னான்டஸ் இந்த சட்டமூலத்திற்கு ஆதரவு அளித்ததோடு, தனது தேர்தல் பிரசாரத்திலும் இந்த சட்டத்தை கொண்டு வருவதற்கு வாக்குறுதி அளித்திருந்தார்.

 

Thu, 12/31/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை