இணக்க சபைகள் மீண்டும் ஜனவரி 09 முதல் ஆரம்பம்

- காணி, நிதி தொடர்பான பிணக்குகள்

கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த இணக்கசபை செயற்பாடுகள் எதிர்வரும் ஜனவரி 09 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுமென நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேவேளை காணி மற்றும் நிதி தொடர்பான பிணக்குகளுக்கு தீர்வு காணும் வகையில் மாவட்டத்திற்கு ஒன்று என்ற ரீதியில் இணக்க சபைகளை உருவாக்கவுள்ளதாகவும் அத்துடன் மாதத்தில் நான்கு நாட்களாக இருந்த இணக்க சபை அமர்வுகளை ஆறு நாட்களாக அதிகரிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க முதற்கட்டமாக கொழும்பு, கம்பஹா, குருணாகல், கண்டி மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் புதிய இணக்க சபைகளை உருவாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது. நீதி அமைச்சில் அமைச்சர் அலி சப்ரிக்கும் இணக்க சபை ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தையொன்று நடைபெற்றுள்ளது.

அதன்போதே மேற்படி தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறிப்பாக காணி மற்றும் நிதி சம்பந்தமான பிணக்குகள் தொடர்பில் முறைப்பாடுகள் மிக அதிகமாக இணக்க சபைக்குகிடைத்து வருவதால் இந்த இரண்டு விடயங்களிலும் கவனம் செலுத்தி அத்தகைய சிக்கல்களுக்கு மட்டும் தீர்வு பெற்றுக் கொள்ளும் வகையிலேயே மாவட்டத்திற்கு ஒன்று என்ற ரீதியில் விசேட இணக்க சபைகள் உருவாக்கப்பட உள்ளன.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Sat, 12/19/2020 - 10:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை