மகாநாயக்க தேரரின் இறுதிக் கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை

ராம்மாஞ்ஞ மஹா நிக்காயவின் மறைந்த மகாநாயக்க தேரர் வணக்கத்திற்குரிய நாபான பேமசிறி தேரரின் இறுதி கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது. அன்றைய தினம் கண்டி, குண்டசாலை - பண்டாரநாயக்க தேசிய பாடசாலை விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது இறுதி கிரியைகள் தொடர்பில் நேற்றைய தினம் விசேட கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேரரின் செயலாளர் தெரிவித்துள்ளார்.ராம்மாஞ்ஞ மஹா நிக்காயவின் மகாநாயக்கர் வணக்கத்திற்குரிய நாபானே பிரேமசிறி தேரர் நேற்று முன்தினம் காலமானார்.

பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 98 வயதில் அவர் காலமானார்.வணக்கத்திற்குரிய நாபானே பிரேமசிறி தேரர் 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3 ஆம் திகதி ராம்மாஞ்ஞ மஹா நிக்காயவின் மகாநாயக்கராக தெரிவு செய்யப்பட்டார்.

Thu, 11/19/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை