சீன நிறுவனங்கள் மீது டிரம்ப் நிர்வாகம் தடை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் நிர்வாகம் சீன நிறுவனங்களில் அமெரிக்க முதலீடுகள் செய்யப்படுவதற்குத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

சீன இராணுவத்துக்குச் சொந்தமானதாக அமெரிக்கா கருதும் அத்தகைய நிறுவனங்களில் முதலீடுகள் செய்வதற்குத் தடை விதிப்பதன் மூலம் சீனா மீதான நெருக்கடியை டிர்ம்ப் அதிகரித்துள்ளார்.

புதிய தடையால் சைனா மொபைல், சைனா டெலிகொம் ஆகிய பெரிய நிறுவனங்கள் பாதிக்கப்படும். புதிய தடை ஜனவரி மாதம் 11ஆம் திகதி அமுலுக்கு வரும். இதற்கிடையே சீனாவின் டிக்டொக் செயலியின்மீது டிரம்ப் நிர்வாகம் விதித்த தடை குறித்த மேல்முறையீட்டை அமெரிக்காவின் நீதிமன்றம் பரிசீலித்தது. நீதிபதியின் உத்தரவின் பேரில் அமெரிக்காவின் வர்த்தகத் துறை வியாழக்கிழமை அமுலுக்கு வரவிருந்த தடையை நிறுத்திவைத்துள்ளது.

இம்மாதம் 3ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் முன்னிலை வகித்துள்ளார் என்பதை டிரம்ப் ஏற்க மறுத்துவரும் வேளையில் இவை அனைத்தும் நிகழ்கின்றன. தேர்தலில் மோசடி நடந்துள்ளதாகக் கூறிவரும் டிர்ம்ப், பல்வேறு மாநிலங்களில் அளிக்கப்பட்ட வாக்குகளின் நம்பகத்தன்மை குறித்து வழக்குத் தொடுத்துள்ளார்.

Sat, 11/14/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை