பைடனுக்கு ‘உளவுக்குறிப்பு’ வழங்க ஆளும் கட்சி எம்.பிக்கள் சிலர் ஆதரவு

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாவிருக்கும் ஜோ பைடனுக்கு, உளவுத்தகவல் பகிர்வு தொடர்பான குறிப்பு அனுப்பும் வழக்கத்துக்கு ஆளும் குடியரசு கட்சியைச் சேர்ந்த ஒரு பிரிவு எம்.பிக்கள் ஆதரவாக உள்ளனர்.

தேர்தல் முடிவில் வெற்றியாளராக அறியப்பட்டவருக்கு உளவுத்தகவல் குறிப்புகள் அனுப்பப்படுவது வழக்கம். ஆனால், இம்முறை நடந்த தேர்தலில் அசாதாரணமான வகையில் தேர்தல் முடிவுகளை ஏற்க தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து மறுத்து வருகிறார்.

இந்த நிலையில் ஜனாதிபதியாக தகுதி பெற வேண்டிய 270க்கும் அதிகமான தேர்தல் சபை வாக்குகளை ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் பெற்றுள்ளதால் அவரே அடுத்த ஜனாதிபதியாக அறியப்படுகிறார்.

எனினும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ நடைமுறை டிசம்பர் மாத முதல் வாரத்தில் ஆரம்பமாகும். அதற்கு முன்னோட்டமாக, அடுத்த ஜனாதிபதியாக அடையாளம் காணப்படுபவருக்கு ரகசிய சேவை பாதுகாப்பு, அவரது வசிப்பிடம், உறவினர்களுக்கான பாதுகாப்பு, ஆட்சிப்பொறுப்பை ஏற்கும்வரை அவரது அலுவல் வசதிகள் போன்றவற்றை அமெரிக்க அரசே ஏற்கும்.

இந்த நடைமுறைகளின் தொடர்ச்சியாக புதிய ஜனாதிபதி நாட்டின் பாதுகாப்பு நிலவரம் தொடர்பான உட்குறிப்பை உளவுத்துறை தினமும் அனுப்பி வைக்கும். இதே நடைமுறை தற்போதும் பின்பற்றப்பட்டு வருகிறது.

ஆனால், இந்த நடவடிக்கையை ஆளும் கட்சியைச் சேர்ந்த சில எம்.பிக்கள் ஆட்சேபித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போதைய ஜனாதிபதியின் நெருங்கிய நண்பரும் குடியரசு கட்சியைச் சேர்ந்தவருமான லிண்ட்ஸே கிரஹாம், வழக்கமான நடைமுறைப்படி ஜனாதிபதிக்கான உள்குறிப்பை பைடனுக்கு அனுப்புவதில் தவறில்லை என்று கூறியுள்ளார்.

Sat, 11/14/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை