பலஸ்தீன பேச்சாளர் எரகத் காலமானார்

கடந்த மூன்று தசாப்தங்களாக பலஸ்தீ னர்களுக்காக சர்வதேச அளவில் பேசி வந்தவரும் முன்னாள் பேச்சு வார்த்தை யாளருமான சயேப் எரகத் கொரோனா தொற்றினால் பாதிக்க ப்பட்டிருந்த நிலையில் நேற்று தனது 65ஆவது வயதில் காலமானார்.

இஸ்ரேலுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகளில் பலஸ்தீன தரப்பின் மூத்த பேச்சுவார்த்தையாளராக இருந்த எரகத் பலஸ்தீன முன்னாள் தலைவர் யாசிர் அரபாத் மற்றும் தற்போதைய ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸின் ஆலோசகராகவும் இருந்து வந்தார்.

1991 தொடக்கம் இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்திற்கு இடையிலோன கிட்டத்தட்ட அனைத்துப் பேச்சுவார்த்தைகளிலும் எரகத் பங்கேற்றுள்ளார். இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன பிரச்சினைக்கு இரு நாட்டு தீர்வொன்றை பெரும் முயற்சியில் அவர் கடுமையாகப் போராடி வந்தார்.

பலஸ்தீன அபிவிருத்த அமைச்சர் அஹமது மஜ்தலினி மற்றும் பலஸ்தீன விடுதலை அமைப்பின் மத்திய குழு உறுப்பினர் அசாம் அல் அஹமது உட்பட பலஸ்தீன மூத்த அதிகாரிகள் பலரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Wed, 11/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை