ஆர்மேனியா–அசர்பைஜான் இடையே அமைதி உடன்படிக்கை கைச்சாத்து

சர்ச்சைக்குரிய நகொர்னோ – கரபக் பிராந்தியத்தில் இடம்பெற்று வரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் உடன்படிக்கை ஒன்றில் ஆர்மேனியா, அசர்பைஜான் மற்றும் ரஷ்யா கைச்சாத்திட்டுள்ளன.

‘எனக்கும் எமது மக்களுக்கும் மிக வலி தருவதாக’ இந்த உடன்படிக்கை உள்ளது என்று ஆர்மேனிய பிரதமர் நிகோல் பசின்யான் தெரிவித்துள்ளார்.

அர்மேனியா மற்றும் அசர்பைஜானுக்கு இடையே ஆறு வாரங்கள் மோதல் இடம்பெற்ற நிலையிலேயே இந்த உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய பிராந்தியம் அசர்பைஜான் நாட்டுக்குள் இருந்தபோதும் அது 1994 ஆம் ஆண்டு தொடக்கம் ஆர்மேனிய இனத்தினர் கட்டுப்பாட்டில் உள்ளது.

கடந்த செப்டெம்பரில் இரு தரப்புக்கும் இடையில் மோதல் வெடித்தது தொக்கம் பல யுத்த நிறுத்த உடன்படிக்கைகள் கைச்சாத்தான போதும் அவை வெற்றி பெறவில்லை. இந்நிலையில் புதிய உடன்படிக்கையின்படி இந்த மோதலில் அசர்பைஜான் கைப்பற்றிய நகொர்னோ – கரபக் பிராந்தியத்தின் பகுதிகள் அந்த நாட்டின் கட்டுப்பாட்டில் இருக்கும். அதற்கு அருகில் உள்ள பகுதிகளில் இருந்து அடுத்த சில வாரங்களில் தமது படையினரை வாபஸ் பெறுவதற்கு ஆர்மேனியா இணங்கியுள்ளது.

இந்த உடன்படிக்கை ஆர்மேனியாவில் ஆர்ப்பாட்டங்களை தூண்டியுள்ளது. பாராளுமன்றத்திற்குள் ஊடுருவிய ஆர்ப்பாட்டக்காரர்கள் சபாநாயகரை தாக்கி இருப்பதோடு பிரதமர் அலுவலகத்தையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சூறையாடியுள்ளனர்.

முன்னரங்குகளில் ரஷ்ய அமைதிகாக்கும படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டி தெரிவித்துள்ளார். இந்த அமைதிகாக்கு நடவடிக்கையில் துருக்கியும் இணைந்திருக்கும் என்று அசர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவ் தெரிவித்தார்.

ஆர்மேனியாவை சரணடையச் செய்திருப்பதாகவும் இந்த உடன்படிக்கை வரலாற்று முக்கியம் வாய்ந்தது என்றும் அவர் தெரிவித்தார்.

Wed, 11/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை