நாட்டுக்கும் மக்களுக்கும் கிடைத்த அதிஷ்டம் மஹிந்த

பிரதமருக்கு ஆளுநர் முஸம்மில் புகழாரம்

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ இந்த நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கு கிடைத்த அதிஷ்டம் என ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் 75ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டும், கொரொனா வைரஸ் தாக்கத்திலிருந்து நாட்டை பாதுகாக்கவும் வேண்டி ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே .எம். முஸம்மில் தலைமையில் பதுளை பிரதான ஜூம்ஆப் பள்ளிவாசலில் சமய நிகழ்வொன்று நடைபெற்றது. அதில் உரையாறும் போதே மேற்கண்டாறு தெரிவித்தார்.

தொடர்ந்துரையாற்றிய அவர், மஹிந்த ராஜபக்‌ஷ இந்த நாட்டின் கலாசார அமைச்சர், அனைத்து மதங்களையும் மதிப்பவர், அவர் போன்ற ஒரு தலைவர் இந்த நாட்டுக்கு கிடைத்து இந்த நாட்டு மக்களின் அதிஷ்டம், மென்மேலும் இந்த நாட்டுக்காக சேவை செய்ய அவருக்கு நீண்ட ஆயுள் வேண்டி பிரார்த்திப்போம் எனத் தெரிவித்தார்.

சர்வமத நிகழ்வுகளுடன் நடைபெற்ற இந்த சமய நிகழ்வில் பதுளை முதியங்கன ரஜமகா விகாரைக்கு பொறுப்பான மலகல சந்திம தேரர், இஸ்லாம், கத்தோலிக்க மற்றும் இந்து மதத் தலைவர்கள், ஊவா மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மாஅதிபர் ரொஷான் வீரசிக, பதுளை நகர மேயர் பிரியந்த அமரசிறி ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

மாவத்தகம தினகரன் நிருபர்

Fri, 11/20/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை