பிறந்த குழந்தையை கைவிட்டு தப்பிச்சென்ற தாய் அடையாளம்

கட்டார் விமான நிலையக் கழிப்பறையில் சில வாரங்களுக்கு முன் குறைமாதத்தில் பிறந்த சிசு கண்டெடுக்கப்பட்டது. தற்போது அதன் பெற்றோரை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.

சிசுவின் பெற்றோர் ஆசியர்கள் என்று தெரிவிக்கப்பட்டது. வெளிநாட்டிற்கு தப்பியோடிய அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

சிசுவின் பெற்றோருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

சிசுவின் தாய் கள்ளக்காதலருடன் நெருங்கி பழகியதால் கர்ப்பமானதாக விசாரணையில் தெரிய வந்தது. பின்னர் குழந்தையை மறைக்க விமான நிலையத்தில் சிசுவை கைவிட்டார்.

கட்டாரில் தென் கிழக்கு ஆசியர்கள் அதிக அளவில் வேலை செய்கின்றனர்.

சிசு கண்டெடுக்கப்பட்டதில் இருந்து கட்டார் விமான நிலையத்தில் பெண் பயணிகளிடம் கட்டாயச் சோதனை நடத்தப்பட்டது. அது உலக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பெண் பயணிகளிடம் கடுமையாக நடந்து கொண்ட விமான நிலையக் காவல்துறை அதிகாரிகள் மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

 

Wed, 11/25/2020 - 07:34


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை