பிரான்சில் ‘குடியரசு சாசனத்தை’ ஏற்பதற்கு முஸ்லிம்களுக்கு கெடு

கடும்போக்கு இஸ்லாத்தின் மீது பரந்த அளவு கட்டுப்பாட்டை கொண்டுவரும் முயற்சியாக, ‘குடியரசு பெறுமான சாசனத்தை’ ஏற்கும்படி பிரான்ஸ் முஸ்லிம் தலைவர்களை அந்நாட்டு ஜனாதிபதி எம்மானுவேல் மெக்ரோன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த சாசனத்தை அங்கீகரிப்பதற்கு முஸ்லிம் நம்பிக்கையாளர்களின் பிரான்ஸ் சபைக்கு கடந்த புதன்கிழமை 15 நாட்கள் கெடு விதிக்கப்பட்டது.

இந்த சபை இமாம்களுக்கு உத்தியோகபூர்வமாக அங்கீகாரம் அளிக்கும் இமாம்களின் தேசிய கௌன்சில் ஒன்றை உருவாக்க இணங்கியது.

பிரான்சில் ஒரு மாத கால இடைவெளிக்குள் இஸ்லாமியவாதிகளின் தாக்குதல் என சந்தேகிக்கப்படும் மூன்று தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றதைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சாசனத்தில் இஸ்லாம் ஒரு சமயம் என்றும் அது அரசியல் அமைப்பு இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. முஸ்லிம் குழுக்களின் வெளியாட்டு தலையீட்டையும் அது தடுக்கிறது.

முஹமது நபி தொடர்பில் சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரத்தை வகுப்பறையில் காண்பித்த ஆசிரியர் தலை துண்டித்து கொல்லப்பட்டது உட்பட இந்தத் தாக்குதல்களை தொடர்ந்து பிரான்சின் மதச்சார்பின்மை கொள்கையை பாதுகாக்க மெக்ரோன் முயன்று வருகிறார்.

எனினும் இது முஸ்லிம் உலகில் பிரான்ஸ் மீதான எதிர்ப்பலையை அதிகரித்துள்ளது.

Sat, 11/21/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை