இஸ்ரேல் குடியேற்ற பகுதிக்கு மைக் பொம்பியோ பயணம்

அமெரிக்க உயர் அதிகாரி ஒருவரின் முதல் விஜயமாக இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்குக் கரையில் யூதக் குடியேற்றம் ஒன்றுக்கு அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ பயணம் மேற்கொண்டுள்ளார்.

அமெரிக்கா நீண்டகாலம் பேணி வந்த நிலைப்பாட்டை மாற்றி, யூதக் குடியேற்றங்கள் சர்வதேச சட்டங்களுடன் முரண்படவில்லை என்று பொம்பியோ குறிப்பிட்டு ஓர் ஆண்டுக்கு பின்னரே அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இந்தப் பிரகடனம் பலஸ்தீனர்களின் கோபத்தை தூண்டியிருந்தது. இந்த யூதக் குடியேற்றங்கள் இருக்கும் பகுதிகள் தமது எதிர்கால சுதந்திர நாட்டைச் சேர்ந்தவை என்று பலஸ்தீனர்கள் வலியுறுத்தி வருகின்றனர். பொம்பியோ தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்ட கோலன் குன்று பகுதிக்கும் இதேபோன்று பயணம் மேற்கொண்டார். 1967 மத்திய கிழக்கு யுத்தத்தில் சிரியாவிடம் இருந்து இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டு 1981இல் இஸ்ரேலின் ஆட்புலத்திற்குள் இணைக்கப்பட்ட கோலன் குன்றில் இஸ்ரேலின் இறைமையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த ஆண்டு உத்தியோகபூர்வமாக அங்கீகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Sat, 11/21/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை