கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஷேன் வொட்சன் ஓய்வு

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை வீரரான ஷேன் வொட்சன், அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஐ.பி.எல். தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியினை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடி வந்த ஷேன் வொட்சன், நடப்பு தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான இறுதி லீக் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

39 வயதான ஷேன் வொட்சன், தனது வயது மற்றும் உடற்தகுதியை கருத்திற்கொண்டு, அவர் இந்த முடிவினை எடுத்ததாக கூறப்படுகின்றது. அவருக்கு தற்போது இன்னாள் மற்றும் முன்னாள் வீரர்கள், இரசிகர்கள் என பலரும் வொட்சனுக்கு சமூகவலைதளத்தின் ஊடாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 2016ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வொட்சன், 2018இல் இருந்து சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். அந்த வருடம் சென்னை அணி சம்பியன் கிண்ணத்தை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர்.

Wed, 11/04/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை