சுகாதார அமைப்பின் கூட்டத்தில் தாய்வானுக்கு அழைப்பு இல்லை

உலக சுகாதார அமைப்பு இந்த வாரம் நடத்தவுள்ள முக்கியக் கூட்டத்தில் பங்கேற்குமாறு தனக்கு இதுவரை அழைப்பு கிடைக்கவில்லை என்று தாய்வான் தெரிவித்துள்ளது.

தனக்கு அழைப்பு விடுப்பதன் தொடர்பிலான நடவடிக்கையைச் சீனா தடுத்துவிட்டதாக தாய்வானிய வெளியுறவு அமைச்சு கூறியது.

உலக சுகாதார அமைப்பின் கூட்டத்துக்கு தாய்வான் அழைக்கப்பட வேண்டும் என்று ஜெனீவாவிலுள்ள அமெரிக்கத் துணைத்தூதரகம் வலியுறுத்தியிருந்தது. ஆனால், ஐக்கிய நாட்டு நிறுவனத்துக்கான சீனத் தூதரகம் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது.

சீனாவின் ஓர் அங்கம் என்பதை தாய்வான் ஒப்புக்கொண்டால் மட்டுமே உலக சுகாதார அமைப்பின் கூட்டத்தில் அது பங்கேற்க முடியும் என்று சீனா கூறியது.

கொவிட் –19 நோய்ப்பரவல் உள்ளிட்ட பல்வேறு சுகாதார அம்சங்களில் தாய்வானுடன் இணைந்து பணியாற்றுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது. அவசியமான நேரத்தில் தாய்வானுக்கு உதவி வழங்கப்பட்டதாகவும் அது குறிப்பிட்டது.   

 

Tue, 11/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை