மியன்மார் பொதுத் தேர்தலில் சூக்கியிற்கு வெற்றி வாய்ப்பு

மியன்மாரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பொதுத் தேர்தலின் வாக்கு எண்ணும் பணிகள் மும்முரமாக இடம்பெற்று வரும் நிலையில் ஆங் சான் சூக்கி மீண்டும் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மியன்மாரில் 2011இல் இராணுவ ஆட்சி முடிவுற்ற பின்னர் இரண்டாவது முறையாக இடம்பெற்ற இந்தத் தேர்தலில் மில்லியன் கணக்கானோர் தமது வாக்கை அளித்துள்ளனர். சூக்கி கடந்த தேர்தலில் பெரு வெற்றி பெற்றிருந்தார். இதன்மூலம் தொடர்ந்து முக்கிய அதிகாரங்களை வைத்திருக்கும் இராணுவ ஜெனரல்களுடன் செய்து கொண்ட உடன்படிக்கையுடன் சூக்கி ஆட்சி அமைத்திருந்தார்.

தேர்தல் முடிவுகள் இன்றைய தினத்திற்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

ஆங் சான் சூக்கி ஆதரவாளர்கள் அவரது கட்சித் தலைமையகத்திற்கு வெளியே கொடிகளை அசைத்தவாறு ஒன்று திரண்டிருந்தனர்.

உள்நாட்டில் செல்வாக்கு பெற்றபோதும் ரொஹிங்கிய முஸ்லிம்கள் தொடர்பான பிரச்சினையால் சூக்கி மீது சர்வதேச அளவில் விமர்சனங்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tue, 11/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை