ரொக்கெட் குண்டை அடுத்து காசாவில் இஸ்ரேல் தாக்குதல்

காசாவில் இருந்து ரொக்கெட் குண்டுகள் வீசப்பட்டதை அடுத்து அந்தப் பகுதி மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

காசா பகுதியில் இருந்து கடந்த சனிக்கிழமை பின்னேரம் தெற்கு இஸ்ரேல் மீது இரு ரொக்கெட்டுகள் வீசப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் கூறியது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி எந்த விபரமும் வெளியிடப்படவில்லை.

நேற்றுக் காலை போர் விமானம், ஹெலிகொப்டர் மற்றும் பீரங்கிகளை பயன்படுத்தி ஹமாஸ் நிலத்தடி சுரங்கப்பதை மற்றும் படைத்தளம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் ட்விட் செய்துள்ளது.

கான் யூனிஸ், ரபா மற்றும் பெயித் ஹனூன் உட்பல பல இடங்களில் வான் தாக்குதல்கள் இடம்பெற்றதாக காசா பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

இஸ்லாமிய ஜிஹாத் தலைவர் பாஹா அபூ அல் அதா கடந்த ஆண்டு இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டு ஓர் ஆண்டு பூர்த்தியான நிலையிலேயே இந்த ரொக்கெட் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Mon, 11/16/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை