பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த சூறாவளி: 67 பேர் உயிரிழப்பு

பிலிப்பைன்ஸை இந்த ஆண்டு தாக்கிய மிகச் சக்திவாய்ந்த சூறாவளியால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 67 ஆக அதிரித்திருப்பதோடு மேலும் 12 பேர் காணாமல்போயுள்ளனர்.

பிலிப்பைன்ஸின் லுசோன் தீவை சக்திவாய்ந்த வாம்கோ சூறாவளி தாக்கியதில் தலைநகர் மணிலா முடங்கியது. மணிலாவில் கனமழை பெய்ததில் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது.

நகரின் பல இடங்களில் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. படகுகள் மூலம் பலர் பாதிக்கப்பட்ட இடங்களிலிருந்து வெளியேறினர்.

மரிகினா நகரிலும் ரிசால் மாநிலத்திலும் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் மக்கள் தங்கள் வீடுகளின் மொட்டை மாடிக்கு விரைந்தனர்.

நிலைமை மோசமடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மரிகினா நகர் மேயரான மார்சிலினோ தியோடோரோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அதிகாலை நேரத்திலிருந்து தங்கள் வீட்டு மொட்டை மாடியில் காத்துக்கொண்டிருப்போரின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவர்களைக் காப்பாற்ற ஹெலிகொப்டர்களை அனுப்பிவைக்கும்படி பிலிப்பைன்ஸ் மக்கள் பாதுகாப்புப் படையை தியோடோரோ கேட்டுக்கொண்டார்.

Mon, 11/16/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை