ஊரடங்கு காலத்தில் நடமாடும் வர்த்தகர்களுக்கான விசேட அனுமதி

ஊரடங்கு காலப்பகுதியில் இதற்கு முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்டவாறு அத்தியாவசிய பொருட்களை நடமாடும் சேவையின் மூலம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் மார்ச் முதல் மே, ஜூன் மாதங்களில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதற்காக அந்தந்த பகுதிகளில் உள்ள கிராம உத்தியோகத்தர், பிரதேச செயலாளர் மற்றும் பொலிஸார் ஆகியோரின் ஒத்துழைப்பு கிடைக்கும். விசேடமாக மருந்துகள், உணவு பொருட்கள், மரக்கறி, மீன் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்க திட்டம் ஒன்று தயாரிக்கப்படும். அதற்காக தெரிவு செய்யபடுவோர் ஏதேனும் வியாபாரத்தில் ஈடுப்பட்டமையை கிராம உத்தியோகத்தர், பிரதேச செயலாளர் ஆகியோர் உறுதிப்படுத்துவது அவசியம். அவர் பதிவுச் செய்யப்பட்ட வியாபாரியாகவும் இருக்க வேண்டும்.

உணவு பொருட்கள், மரக்கறி வகைகள், முட்டை உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்வதற்கு உரிய இடங்களுக்கு வருகைதர முடியும்.

அதற்கான அனுமதி பத்திரம் வழங்கப்படும். வீதித் தடைகளில் கடமையில் உள்ள பொலிஸாருக்கும் அது குறித்து அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tue, 11/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை