தப்பிக்க முயன்ற நான்கு கைதிகள் மடக்கிப் பிடிப்பு

கண்டியில் உள்ள பழைய போகம்பறை சிறைச்சாலையிலுள்ள தனிமைப்படுத்தப்பட்ட நிலையத்திலிருந்து தப்பியோட முயற்சித்த நான்கு கைதிகள் சிறை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றுமுன்தினம் நள்ளிரவில் தப்பியோட  முயற்சித்துள்ள கைதிகளே அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவ வேளை, சிறை அதிகாரிகள் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்து தப்பியோடிய கைதிகளை கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது :

சிறைச்சாலையில் ஒரு பகுதியில் தடுத்து வைக்கப்பட்ட இவர்கள் கதவை உடைத்து அங்கிருந்து திறந்த வெளிக்கு வெளியே வரும் வேளை அதனை கண்காணித்த சிறை அதிகாரிகள் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்து நிலைமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். ேலும் குறித்த தனிமைப்படுத்தும் நிலையமான பழைய போகம்பறை சிறைச்சாலையிலிருந்து அண்மையில் தப்பிக்க முயன்ற சந்தர்ப்பத்தில் அவர்களில் ஒருவர் சுவரில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும் .

மேலும் போகம்பறை சிறைச்சாலையில் தற்போது சுமார் 310 கைதிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் குறித்து சிறைச்சாலை அதிகாரிகள் விசாரணை நடாத்தி வருகிறனர்.

எம்.ஏ.அமீனுல்லா

Mon, 11/30/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை