வசதி இல்லாதவர்களுக்கு சவப்பெட்டியை வழங்கவும் நடவடிக்கை

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி

கொவிட் 19 தொற்றுக்கிலக்காகி உயிரிழப்பவர்களின் இறுதிக் கிரியைக்கு சவப் பெட்டியை பெற்றுக்கொள்ள வசதி இல்லாதவர்களுக்கு அதனை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோமென சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவிக்கையில்,

கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களில் அதிகமானவர்கள் கொழும்பிலேயே இறக்கின்றனர். இவ்வாறு உயிரிழப்பவர்களை தகனம் செய்வதற்காக கொழும்பு ஐ.டி.எச். வைத்தியசாலையில் 58 ஆயிரம் ரூபா அறவிடப்படுவதாக சமூக வலைத்தலங்களில் பரவலாக செய்தி வெளியிடப்படுகின்றது. இதன் உண்மை நிலை என்ன? என எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே சுகாதார அமைச்சர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொவிட்19 தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் ஒருவரின் சடலத்தை தகனம் செய்வதற்கான செலவினங்களை இறந்தவரின் குடும்பமே மேற்கொள்கின்றது. குறிப்பாக சடலத்தை அடக்கம் செய்ய எந்தவகையான பெட்டியை பெற்றுக்கொள்வது, எங்கிருந்து பெற்றுக்கொள்வது போன்ற விடயங்களை அந்த குடும்பமே மேற்கொள்கின்றது.

இறுதிக் கிரியையை மேற்கொள்ள சவப் பெட்டியை பெற்றுக்கொள்ள வசதி இல்லாதவர்களுக்கு அதனை பெற்றுக்கொடுக்க நன்கொடையாளர்களுடன் கதைத்து தேவையான வசதிகளை செய்து கொடுக்கின்றோம் என்றார்.

சம்ஷ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Thu, 11/26/2020 - 10:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை