ஒரு வாரத்தில் 2ஆவது முறையாகவும் சிரியா மீது இஸ்ரேல் வான் தாக்குதல்

சிரிய தலைநர் டமஸ்கசின் தெற்காக உள்ள பகுதி மீது இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக சிரிய இராணுவம் குறிப்பிட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்திற்குள் இஸ்ரேல் நடத்தும் இரண்டாவது தாக்குதலாக இது உள்ளது.

இஸ்ரேலிய போர் விமானங்கள் கடந்த செவ்வாய்க்கிழமை நல்லிரவுக்கு சற்று முன்னர் ஆக்கிரமிக்கப்பட்ட கோலன் குண்டு பகுதியில் இருந்து தாக்குதல் தொடுத்ததாக இராணுவ அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி சிரிய அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

‘சரியாக இரவு 11.50 மணிக்கு சியோனிச எதிரிகள் ஆக்கிரமிப்பு கோலன் குன்று திசையில் இருந்து தெற்கு டமஸ்கஸை நோக்கி வான் தாக்குதலை நடத்தியது. இதனால் பொருட் சோதங்கள் ஏற்பட்டன’ என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. எனினும் இந்தத் தாக்குதலில் ஈரான் ஆதரவு எட்டு போராளிகள் கொல்லப்பட்டதாக பிரிட்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது. ஈரானிய படை மற்றும் அதன் லெபனான் கூட்டணியான ஹிஸ்புல்லாவின் ஆயுதக் கிடங்கு மற்றும் நிலைகளை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக அது குறிப்பிட்டுள்ளது.

1967 யுத்தத்தில் சிரியாவிடம் இருந்து இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட கோலன் குண்டு பகுதியில் வீதியோர குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து சிரியாவில் ஈரானிய இலக்குகள் மீது இஸ்ரேல் கடந்த வாரம் வான் தாக்குதல்களை நடத்தியது.

சிரியாவில் 2011ஆம் ஆண்டு உள்நாட்டு யுத்தம் ஆரம்பித்தது தொடக்கம் அந்நாட்டில் குறிப்பாக ஈரான் மற்றும் லெபனான் ஹிஸ்புல்லாவை இலக்கு வைத்து இஸ்ரேல் நூற்றுக்கணக்கான வான் தாக்குதல்களை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Thu, 11/26/2020 - 10:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை