ரஷ்ய தடுப்பூசி விலை 20 டொலருக்கும் குறைவு

‘ஸ்புட்னிக் பைவ்’ கொரோனா தடுப்பூசி மற்ற அனைத்து தடுப்பு மருந்துகளையும் விட செயல்திறன் மிக்கது. அவற்றை விடப் பாதி விலையில் கிடைக்கக்கூடியது என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

இரண்டு முறை கொடுக்கப்படவேண்டிய ஸ்புட்னிக் பைவ் தடுப்பூசி 95 வீதம் செயல்திறன் கொண்டது என்று அதன் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. என்றாலும், ரஷ்யத் தடுப்பூசி குறித்து அது எந்த உத்தரவாதமும் வழங்கவில்லை. 20 டொலருக்கும் குறைவான விலையில் ஒருவருக்கான தடுப்பூசியை சர்வதேச சந்தையில் வழங்க முடியும் என்று அதிகாரிகள் கூறினர்.

ரஷ்யக் குடிமக்களுக்கு தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும். முன்னோட்டப்

பரிசோதனைகளில் இதுவரை பக்கவிளைவுகள் ஏதும் கண்டறியப்படவில்லை.

வரும் ஜனவரியில் ஸ்புட்னிக் பைவ் தடுப்பூசியை சர்வதேச சந்தைக்கு விநியோகிக்க முடியும் என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது.  

Thu, 11/26/2020 - 13:41


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை