சீன கொவிட்–19 தடுப்பு மருந்து சோதனை பிரேசிலில் நிறுத்தம்

சீனாவின் கொரோனா தடுப்பு மருந்தைப் பயன்படுத்தியதில் பக்க விளைவுகள் ஏற்பட்டதன் காரணமாக அதனைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக பிரேசில் தெரிவித்துள்ளது.

சீனாவின் தேசிய மருத்துவ நிறுவனமான சினோபார்ம் தயாரிக்கும் கொரோனா தடுப்பு மருந்துகள் பல்வேறு கட்ட மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சீனாவின் கொரோனா தடுப்பு மருந்துகள் பிரேசிலில் மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து பிரேசில் சுகாதாரத் துறை அமைச்சகம் கூறும்போது, “கடந்த ஒக்டோபர் 29 ஆம் திகதி நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளில் பக்க விளைவுகள் ஏற்பட்டன. இதனால் மனிதர்கள் மீது நடத்தப்படும் மருத்துவப் பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பக்க விளைவுகள் குறித்து தற்போது விரிவாகக் கூற முடியாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவப் பரிசோதனைகளின் இறுதிக் கட்டத்தில் சீனாவில் நான்கு கொவிட்–19 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

Wed, 11/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை