460 பொலிஸாருக்கு கொரோனா தொற்று

பொலிஸ் உத்தியோகத்தர்கள் 460 பேருக்கு இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாநகர பிரதேசத்தில் நோய்த் தொற்றுக்கு உள்ளான பொலிஸார் தொடர்பில் ஆராய்வதற்காக மூன்று உயர் பொலிஸ் அதிகாரிகளை பொலிஸ் மா அதிபர் நியமித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள பொலிஸார் மத்தியில் இருந்தே வைரஸ் தொற்று நோயாளிகள் இனங்காணப்பட்டு வருகின்றனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்டுள்ள பிசிஆர் பரிசோதனைகளின் பின்னரே தற்போதைய நிலைமை உருவாகியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள பொலிஸாரின் குடும்பங்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவை வழங்கத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் தொற்று சூழ்நிலையை கருத்தில் கொண்டு மேல் மாகாணம் உள்ளிட்ட தனிமைப்படுத்தலுக்காக முடக்கப்பட்டுள்ள பகுதியுலுள்ள கர்ப்பிணி மற்றும் 02 வயதுக்குட்பட்ட சிறு பிள்ளைகளைக் கொண்டுள்ள பெண் பொலிஸார் கடமைக்கு வருகை தர வேண்டிய அவசியமில்லையென்றும் அவர் தெரிவித்துள்ளார். அதனை ஒரு சலுகையாக வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் பொலிஸ் உத்தியோகத்தர்களில் இதுவரை 424பேர் வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் அவர்களில் 145 பேர் பொலிஸ் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்தவர்களென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

 

Wed, 11/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை