மானிட அன்பை கட்டியெழுப்ப தம்மை அர்ப்பணித்த உத்தமர் நபி

பிரதமர் மஹிந்த மீலாத்தின வாழ்த்து

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பிறந்த தினத்தை கொண்டாடுகின்ற இலங்கையில் வாழ்கின்ற சகல இஸ்லாமிய மக்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ விடுத்திருக்கும் வாழ்த்துச் செய்தியில்  இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மனிதத்துவத்தில் நிறைந்த கௌரவமான மானிட அன்பை கட்டியெழுப்புவதற்காக தம்மை அர்ப்பணித்த நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினம் இன்றாகும். உலகெங்கும் வாழ்கின்ற இஸ்லாமியர்கள் இன்று மிகவும் உற்சாகமாக நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை சமய அனுஷ்டானங்களுடன் கொண்டாடுகின்றனர். மற்றவர்களுடன் நம்பிக்கையை கட்டியெழுப்பிய அவர் அல் அமீன் என்ற பெயரிலும் பிரபல்யமானார்.

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் நற்குணங்கள் ஏனையவர்கள் மத்தியில் பிரயல்யமடைந்ததுடன் இஸ்லாமிய மதத்தை உலகெங்கும் பரப்பி அவரது 40வது வயதில் அல்ஹாவின் தூதராக கூடிய வரத்தை அவர் பெற்றார். பின்பு அரேபிய மக்களை சரியான பாதையில் இட்டுச் செல்வதற்கு வழிகாட்டிய அவர், 23 வருடங்களாக இறைவனிடமிருந்து கிடைத்த ஏவல்களை நிறைவேற்றினார்.

வாழ்நாள் முழுவதும் அவர் பேணிய குணநலன்கள் , மனிதர்களுக்காக செய்த அர்ப்பணிப்புகள் அளவற்றவை. புரிந்துணர்வு சகோதரத்துவம் ஒருவருக்கொருவர் உபகாரம் செய்தல் மற்றும் நியாயம் ஆகியவை முஹம்மது நபி (ஸல்) அவர்களின் அடிப்படை பண்புகளாகும். அதுபோல் மானிட சமுகத்திற்குள் சிறந்த குணநலன்களை வளர்ப்பதும் அஹிம்சையை பேணுவதும் நபி (ஸல்) அவர்களின் நோக்கமாகும்.

இஸ்லாமிய நாடுகள் சர்வதேச அமைப்புகளூடாக இலங்கைக்கு நிபந்தனை அற்றவிதத்தில் ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றன. இந்நாடுகள் எங்களுக்கு வழங்கிய அந்த ஒத்துழைப்புகளுக்கு மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். இந்த நாடுகள் அனைத்தும் நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை கொண்டாடும் இத்தருணத்தில் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றோம்.

அவ்வாறே கொவிட் -19 நிலைமைக்கு மத்தியில் பாரிய நெருக்கடிக்கு நாங்கள் முகம் கொடுத்துள்ளோம். அதனால் உரிய வகையில் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி இஸ்லாமிய வழிகாட்டல்களுக்கமைய இந்த பிறந்த தினத்தை அனு|ஷ்டிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். அனதை்து மனிதர்களுக்கும் சமமான உரிமைகள் கிடைக்கவேண்டும் என்று இந்த உலகத்திற்கு போதித்த நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டலுக்கமைய சிறந்த ஒழுக்கமுடைய சமுகமொன்றை கட்டியெழுப்புவதற்கு பாடுபடுகின்ற இலங்கைக்கு கைகொடுக்குமாறு உலக மக்கள் அனைவரையும் கேட்டுக்கொள்வதுடன் இந்த நோயிலிருந்து பாதுகாக்க பிரார்த்தனை செய்யுமாறு அனைத்து இஸ்லாமிய மக்களையும் கேட்டுக்கொள்கின்றோம்.

சமய அனுஷ்டானங்களில் ஈடுபட்டு, ஏழைகளுக்கு உதவி செய்து நபி (ஸல்) அவர்களின் போதனைக்கமைய முஹம்மது ஸல் அவர்களின் பிறந்த தினத்தை கொண்டாடுகின்ற இலங்கை வாழ் இஸ்லாமியர்களுக்கும் உலகிலுள்ள இஸ்லாமயர்களுக்கும் சிறந்ததொரு நன்நாளாக மீலாதுன் நபி தினம் அமைய பிரார்த்தனை செய்கின்றோம்.

 

 

Fri, 10/30/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை