பிரச்சினைக்குரிய பகுதிக்கு கப்பலை அனுப்பும் துருக்கி

மத்தியதரைக் கடலில் கிரேக்கத்துடன் முறுகளில் உள்ள கடல் பகுதிக்கு துருக்கி மீண்டும் தனது ஆய்வுக் கப்பலை அனுப்பவுள்ளது.

கிரேக்கம், துருக்கி மற்றும் சைப்ரஸ் நாடுகள் உரிமை கோரும் பகுதிக்கு துருக்கி இந்தக் கப்பலை அனுப்பியது கடந்த ஓகஸ்டில் பதற்றத்தை ஏற்படுத்தி இருந்தது.

இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவரும் இராஜதந்திர முயற்சிக்காக துருக்கி கடந்த செப்டெம்பரில் ஓருக் ரெயிஸ் என்ற அந்தக் கப்பலை வாபஸ் பெற்றது.

இந்நிலையில் கிழக்கு மத்தியதரைக் கடலில் 10 நாட்கள் நில அதிர்வு ஆராச்சியில் ஈடுபடும் என்று துருக்கி குறிப்பிட்டுள்ளது. இந்தக் கப்பலுடன் மேலும் இரண்டு கப்பல்கள் இணைந்துள்ளன.

துருக்கி மற்றும் கிரேக்கம் நேட்டோ அங்கத்துவ நாடாக இருந்தபோதும் கடல்சார் ஊரிமையை கோரி இந்த இரு நாடுகளும் நீண்ட காலமாக முறுகலில் உள்ளன.

Tue, 10/13/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை