பங்களாதேஷில் கற்பழிப்புக்கு மரண தண்டனை அறிமுகம்

பாலியல் வன்முறைக்கு எதிராக பங்களாதேஷில் மரண தண்டனை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இதனை சட்டமாக அங்கீகரிக்கும் உத்தரவை ஜனாதிபதி இன்று செவ்வாய்க்கிழமை வெளியிடுவார் என்று பங்களாதேஷ் நீதி அமைச்சர் அனிசுல் ஹக் தெரிவித்துள்ளார்.

பெண் ஒருவருக்கு எதிராக கூட்டு பாலியல் வன்முறை வீடியோ காட்சி ஒன்று வெளியானது பங்களாதேஷில் கடும் எதிர்ப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டில் சுமார் 5,400 கற்பழிப்புச் சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக செயற்பாட்டளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் பெண்கள் முறையிட முன்வராத நிலையில் மிகக் குறைவான சம்பவங்களே சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதாக செயற்பாட்டளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதில் சமூகதளத்தில் பரவி இருக்கும் வீடியோவில் உள்ள பெண் எட்டு ஆண்களால் பல தடவைகள் கற்பழிப்புக்கு உள்ளாகி இருப்பதாகவும் அந்த சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டிருப்பதாகவும் பங்களாதேஷ் மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Tue, 10/13/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை