பொம்பியோவை சந்திப்பதற்கு பாப்பரசர் பிரான்சிஸ் மறுப்பு

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோவை சந்திக்க பாப்பரசர் பிரான்சிஸ் மறுத்துள்ளார். தேர்தல் காலத்தில் பாப்பரசர் அரசியல்வாதிகளை சந்திப்பதில்லை என்று வத்திக்கான் குறிப்பிட்டுள்ளது.

கத்தோலிக்க திருச்சபை மற்றும் சீனாவுக்கு இடையிலான உறவு பற்றி பம்பியோ கருத்து வெளியிட்டது இராஜதந்திர முறுகலாக மாறிய நிலையிலேயே இது நிகழ்ந்துள்ளது. எதிர்வரும் நவம்பரில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்காளர்களை கவர பொம்பியோ முயற்சிக்கிறார் என்று வத்திக்கான் குற்றம்சாட்டியுள்ளது. சீனாவுடன் உறவை ஏற்படுத்தி ஆயர்களை நியமித்ததன் மூலம் வத்திக்கான் தார்மீக அதிகாரத்தை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி இருப்பதாக கடந்த மாத ஆரம்பத்தில் பொம்பியோ குறிப்பிட்டிருந்தார். பழைமைவாத கத்தோலிக்க வாக்காளர்கள் உட்பட பழைமைவாத மத அமைப்புகளில் டிரம்புக்கு ஆதரவு உள்ளது. அவ்வாறானவர்கள் பாப்பரசர் பிரான்சிஸ் அதிக மிதவாதியாக இருப்பதாக நம்புகின்றனர்.

Fri, 10/02/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை