அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 8 மில்லியனாக உயர்வு

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 மில்லியனைத் தாண்டியுள்ளது. அங்கு புதிதாக 60,000 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானது.

கடந்த ஓகஸ்ட் மாத நடுப்பகுதிக்குப் பின்னர் இப்போது, ஒரே நாளில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில், ஒரு மாதத்திற்குள் சுமார் 1 மில்லியன் பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய்ப்பரவல் ஆரம்பித்ததில் இருந்து 217,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

குளிர்காலம் ஆரம்பித்ததில் இருந்து வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

குளிர்காலத்தில் அதிகமானோர் வீட்டிலே இருப்பதால் நோய்ப்பரவல் மோசமாகக்கூடுமென சுகாதார வல்லுநர்கள் எச்சரித்தனர்.

மாணவர்கள் மீண்டும் பாடசாலைகள், கல்லூரிகளுக்குத் திரும்புவதாலும், கட்டுப்பாடுகளால் மக்கள் சோர்வடைந்திருப்பதாலும் நோய்ப்பரவல் மோசமாகியுள்ளதை அவர்கள் சுட்டிக்காட்டினர்.

Sat, 10/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை