புர்கினா பாசோ தாக்குதலில் இடம்பெயர்ந்த 25 பேர் பலி

புர்கினா பாசோவில் இடம்பெயர்ந்தவர்களை ஏற்றி தமது சொந்த ஊர்களுக்கு அழைத்துச் சென்ற வாகனங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றிருக்கும் இந்த சம்பவத்தில் ஆயுததாரிகள் ஆண்களை மாத்திரம் வேறாக பிரித்து கொன்றிருப்பதாக ஐ.நா குறிப்பிட்டுள்ளது. இதன்போது பெண்கள் மற்றும் சிறுவர்களை விடுவித்ததாக உயிர்தப்பியவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பாதுகாப்பு நிலை மேம்பட்டிருப்பதான நம்பிக்கையில் இடம்பெயர்ந்த மக்கள் பசில்லா நகரில் இருந்து தமது சொந்த ஊருக்கு திரும்பும் வழியில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

மேற்கு ஆபிரிக்காவில் அமைதியான நாடுகளில் ஒன்றாக இருந்த புர்கினா போசோவில் ஆயுதப் போராட்டங்கள் காரணமாக வன்முறை அதிகரித்திருப்பதோடு, இவ்வாறான வன்முறைகளில் இந்த ஆண்டில் 2,000 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். இந்த மோதல்களால் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் இடம்பெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Fri, 10/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை