லங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கெட்; அட்டவணையும், அணிகளின் பெயர்களும்

இலங்கையின் கிரிக்கெட் ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த லங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் போட்டி அட்டவணை மற்றும் தொடரில் பங்கேற்கும் அணிகளின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

நவம்பர் 14ம் திகதி லங்கா ப்ரீமியர் லீக் தொடர் ஹம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்தில் ஆரம்பிக்கவுள்ளதுடன், நொக்-அவுட் போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி என்பன பல்லேகலையில் நடைபெறவுள்ளன. இதற்கிடையில் குழுநிலை போட்டிகள் சூரியவெவ, பல்லேகலை ஆகிய மைதானங்களில் நடைபெற்று, இறுதிக்கட்ட குழுநிலை போட்டிகள் தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளன. 

லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் ஆரம்ப நிகழ்வு 14ம் திகதி ஹம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்தில் 5அணிகளின் பங்கெடுப்புக்கு மத்தியில் நடைபெறவுள்ளது. இதில், கொழும்பு லயன்ஸ், தம்புள்ளை ஹோக்ஸ், காலி க்ளேடியேட்டர்ஸ், யாழ்ப்பாணம் கோப்ராஸ் மற்றும் கண்டி டஸ்கர்ஸ் என அணிகள் பெயரிடப்பட்டுள்ளன. 

முக்கியமாக லங்கா ப்ரீமியர் லீக் தொடரானது இலங்கையில் மிகவும் புகழ்பெற்ற மைதானமான ஆர்.பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் புனரமைப்பு பணிகள் காரணமாக போட்டிகள் அங்கு நடைபெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இலங்கை கிரிக்கெட் சபை மற்றும் லங்கா ப்ரீமியர் லீக்தொடரின் உரிமையாளர்களான IPG குழுமம் என்பன உத்தியோகபூர்வமாக அணியின் உரிமையாளர்கள் மற்றும் அணியின் பெயர்களை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

லங்கன் ப்ரீமியர் லீக்கின் போட்டி அட்டவணை 

நவம்பர் 14 – 8பி.ப – காலி vs கொழும்பு –           சூரியவெவ  

நவம்பர் 15 – 4பி.ப – கண்டி vs யாழ்ப்பாணம் –   சூரியவெவ  

நவம்பர் 15 – 8பி.ப – கொழும்பு vs தம்புள்ளை –  சூரியவெவ  

நவம்பர் 17 – 4பி.ப – கொழும்பு vs காலி –            சூரியவெவ  

நவம்பர் 17 – 8பி.ப – தம்புள்ளை vs யாழ்ப்பாணம் – சூரியவெவ  

நவம்பர் 18 – 4பி.ப – காலி vs தம்புள்ளை –               சூரியவெவ  

நவம்பர் 18 – 8பி.ப – கொழும்பு vs கண்டி –               சூரியவெவ  

நவம்பர் 21 – 4பி.ப – கண்டி vs யாழ்ப்பாணம் –         பல்லேகல 

நவம்பர் 21 – 8பி.ப – தம்புள்ளை vs கொழும்பு –       பல்லேகல 

நவம்பர் 22 – 4பி.ப – யாழ்ப்பாணம் vs கொழும்பு –   பல்லேகல 

நவம்பர் 22 – 8பி.ப– கண்டி vs காலி –                        பல்லேகல 

நவம்பர் 24 – 4பி.ப – யாழ்ப்பாணம் vs கொழும்பு –   பல்லேகல 

நவம்பர் 24 – 8பி.ப – காலி vs கண்டி –                       பல்லேகல 

நவம்பர் 27 – 4பி.ப – கண்டி vs தம்புள்ளை –             தம்புள்ளை 

நவம்பர் 27 – 8பி.ப – யாழ்ப்பாணம் vs – காலி          தம்புள்ளை 

நவம்பர் 28 – 4பி.ப – தம்புள்ளை vs காலி –               தம்புள்ளை 

நவம்பர் 28 – 8பி.ப – கண்டி vs கொழும்பு –               தம்புள்ளை 

நவம்பர் 29 – 8பி.ப – தம்புள்ளை vs யாழ்ப்பாணம்–  தம்புள்ளை 

டிசம்பர் 01 – 4பி.ப – தம்புள்ளை vs கண்டி –              தம்புள்ளை 

டிசம்பர் 01 – 8பி.ப – காலி vs யாழ்ப்பாணம்–            தம்புள்ளை  

டிசம்பர் 05 – 4பி.ப– 1ஆவது அரையிறுதி –             பல்லேகல 

டிசம்பர் 05 – 8பி.ப – 2ஆவது அரையிறுதி –          பல்லேகல 

டிசம்பர் 06 – 8பி.ப – இறுதிப் போட்டி –                  பல்லேகல

Thu, 09/17/2020 - 09:35


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை