நஞ்சூட்டப்பட்ட ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் தாய்நாடு திரும்ப முடிவு

நஞ்சூட்டப்பட்ட ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவல்னி மீண்டும் ரஷ்யா திரும்புவார் என்று அவரது பேச்சாளர் தெரிவித்துள்ளார்.  

ஜெர்மன் மருத்துவமனையில் சுயநினைவிழந்த நிலையில் சேர்க்கப்பட்ட அவரது உடலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. உடல் மெலிந்த நிலையில் இருக்கும் நவல்னியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் அவரது செய்தித் தொடர்பாளரான கிரா யர்மிஷ் வெளியிட்டுள்ளார்.  

கடந்த ஓகஸ்ட் 20ஆம் திகதி செர்பியாவில் விமானப் பயணத்தின்போதே நவல்னி மயங்கி விழுந்தார். அவருக்கு நொவிசொக் என்ற விசம் ஊட்டப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. ஜெர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள சரிட் மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார்.  

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் உத்தரவுக்கு அமையவே அவர் நஞ்சூட்டப்பட்டதாக அவரது ஆதரவாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனினும் அதனை ரஷ்யா மருத்து வருகிறது. நவால்னி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ஆதரவாளர்களுக்காக ஒரு இடுகையை பதிவிட்டுள்ளார். “நான் நவால்னி பேசுகிறேன். உங்களை எல்லாம் மிகவும் பிரிந்துள்ளதாக உணர்கிறேன். இப்போது என்னால் முழுமையாக செயல்பட முடியாவிட்டாலும், ஒருநாள் முழுவதும் எனது சொந்த முயற்சியில் கருவிகளின்றி மூச்சு விட முடிந்திருக்கிறது” என்று அவர் கூறியுள்ளார்.

Thu, 09/17/2020 - 09:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை