நாட்டுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்த பிரதமர் பணிப்பு

கிழக்கு கடலில் எரிந்து கொண்டிருக்கும் எண்ணெய்க் கப்பல்;

உரிய அதிகாரிகளுடன் தொலைபேசியில் கலந்துரையாடி நடவடிக்ைக

கிழக்கு கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளாகி எரிந்துக்கொண்டிருக்கும் எம்.ரி-.நிவ் டயமன்ட் கப்பலால் இலங்கையின் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளை தவிர்த்துக் கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக முன்னெடுக்குமாறு கடலோர பாதுகாப்பு, கடலோர வள முமைத்துவ திணைக்களத்துக்கும் ஏனைய பொறுப்புடைய அரச நிறுவனங்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆலோசனை வழங்கியுள்ளார். பொறுப்புடைய அரச நிறுவனங்களின் உரிய அதிகாரிகளை நேற்றுமுன்தினம் இரவு தொலைபேசியில் அழைத்தே பிரதமர் இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளதாக பிரதமரின் செயலாளர் சிறிநிமால் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோரின் நேரடி அறிவுறுத்தலின் பேரில் அனைத்து ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளும் கடல்சார் பாதுகாப்பு அதிகார சபையால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பனாமா அரசிற்குச் சொந்தமான எம்.ரி- நிவ் டயமன்ட் கப்பல் குவைத்திலிருந்து இந்தியாவுக்குச் சென்று கொண்டிருந்தபோது, இலங்கையில் கிழக்கு கடற்பரப்பில் 38 கடல் மைல் தொலைவில் நேற்றுமுன்தினம் தீப்பிடித்தது. இந்த கப்பலில் 2,70,000 தொன் மசகு எண்ணெய் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு, கடலோர பாதுகாப்பு மற்றும் கடலோர வள முகாமைத்து திணைக்களம், இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை, இலங்கை துறைமுக அதிகாரசபை, சுற்றுச்சூழல் அதிகார சபையின் கீழ் உள்ள கடல்சார் பாதுகாப்பு திணைக்களம், மீன்வளத் துறை, இடர் முகாமைத்துவ திணைக்களம், வானிலை ஆய்வுத் துறை, வனவிலங்குத் துறை, இலங்கை பெட்ரோலியம் கூட்டுத்தாபனம் உட்பட 15 நிறுவனங்கள் ஒருங்கிணைந்த பாதுகாப்புத் திட்டம் இந்த செயற்பாட்டை வெற்றிக்கொள்ள மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Sat, 09/05/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை