இலங்கை கடற்பரப்பை பாதுகாக்க தேவையான நடவடிக்ைககள் அரசாங்கத்தினால் முன்னெடுப்பு

சுற்றாடல்துறை அமைச்சர்- மஹிந்த அமரவீர

கிழக்கு கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான கப்பலில் மேலும் வெடிப்புகளோ அல்லது பாரிய எண்ணெய்க் கசிவுகளோ ஏற்பட்டால் அது இலங்கையின் கடற்சூழலுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதனை தடுக்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கையால் இந்த விவகாரத்தை கையாள முடியாதுபோனால் தெற்காசிய நாடுகளின் ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கிழக்கு கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான கப்பல் குறித்து விசேட கலந்துரையாடலொன்று நேற்று சுற்றாடல் அமைச்சில் நடைபெற்றது.

துறைசார் அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் நேற்று நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, சமுத்திர ஊழல் ஒழிப்பு அதிகார சபையினர் உட்பட துறைசார் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்தச் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர,

02 இலட்சத்து 70ஆயிரம் தொன் எரிபொருளுடன் இந்த கப்பல் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதிலுள்ள எரிபொருள் வெடிப்புக்கு உள்ளானாலோ அல்லது கப்பலில் இருந்து எண்ணெய்க் கசிவுகள் ஏற்பாட்டாலோ பாரிய சுற்றாடல் பாதிப்பு ஏற்படும்.

தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இதனால் சுற்றுச் சூழலுக்கு பாதிப்புகள் ஏற்படுமானால் அதனைத் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். பாரிய எண்ணைக் கசிவுகள் ஏற்பட்டால் ஹம்பாந்தோட்டைமுதல் யாழ்ப்பாணம் வரையான கடற்பரப்பில் இது பரவலடையும்.

இதனை தனியொரு நாட்டால் மாத்திரம் கையாள முடியாது என்பதால் தெற்காசிய நாடுகளின் ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்வது அவசியமாகும். அதற்குத் தேவையான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று கப்பல் உரித்துடைய நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து உரிய அரச நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

இந்த கப்பலிலுள்ள எரிபொருளை வேறு கப்பலுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை இலங்கை கடற்படையினர், விமானப் படை மற்றும் இந்திய பாதுகாப்புப் பிரிவினர் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Sat, 09/05/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை