தெற்கின் அதிகாரியை சுட்டு தீமூட்டிய வடகொரியப் படை

வட கொரிய துருப்புகளால் தென் கொரிய அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டு அவரது உடலுக்கு தீ வைக்கப்பட்டிருப்பதாக தென் கொரிய பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளதோடு இந்த சம்பவத்தை ‘கொடூர செயல்’ என்று கண்டித்துள்ளது.

எல்லைப் பகுதிக்கு அருகில் ரோந்துப் படகு ஒன்றில் இருந்து காணாமல்போன அந்த நபரின் உடல் வட கொரிய கடல் பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாக தென் கொரியா குறிப்பிட்டுள்ளது.

வட கொரிய படையினர் அவரை சுட்டுக்கொன்று அவரது உடலுக்கு எண்ணெயை ஊற்றி தீவைத்துள்ளனர் என்று பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. மீன்பிடித் திணைக்களத்தில் பணியாற்றும் 47 வயதான இரண்டு குழந்தைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். இது தொடர்பில் வட கொரிய தரப்பில் இருந்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்பாடுத்த நாட்டுக்குள் நுழைவதை தடுத்திருக்கும் வட கொரியா எல்லை பகுதிகளில் சுட்டுக் கொல்லும் கொள்கையை பின்பற்றி வருகிறது. தென் கொரிய நபரை வட கொரிய வீரர்கள் இவ்வாறு கொல்வது இது முதல்முறையல்ல. கடந்த ஜூலை 2008ஆம் ஆண்டும் கும்கங்க் மலையில் சுற்றுலாவுக்கு சென்ற தென் கொரியர் ஒருவர் வட கொரிய வீரர்களால் சுட்டுத்தள்ளப்பட்டார்.

Fri, 09/25/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை